top of page

கடற்தொழிற் பாடல்கள்

01. வலை இழுப்போர் பாடும் பாடல் (VALAI IZHUPPOR PAADUM PAADAL)

 

These songs are sung at the time of pull the net with fish into the boat. These songs mostly tell about the fisheries works also it describes the struggles in their life. It contains love theme.

The following songs are given in eastern areas.

ஏலேலோ ஐலசா

வானமுட்ட ஏலேலோ நிற்கிறானே ஐலசா

ஓடி ஓடி ஏலேலோ இழுக்கவேணும் ஐலசா

மண்ணநம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா

மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா

கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா

இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா

பூவநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா

பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா

காய நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா

பழத்த நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா

உன்ன நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா

உச்சி வெயிலில் ஏலேலோ உருகிறேனே ஐலசா

உள்ளம் மட்டும் ஏலேலோ உன்னிடமே ஐலசா

02. தண்டு வலிப்போர் பாடும் பாடல் (THANDU VALIPPOR PAADUM PAADAL)

These songs are sung at the time of fishermen ride the “Kaddu Maram by using big sticks. By these songs, they make a co-ordination among them.

இழுடா ஏலே

நங்கூரத்த ஏலே துhக்கு ஏலே

கெதியா ஏலே இழுடா ஏலே

நங்கூரத்த ஏலே துhக்குடா ஏலே

கெதியா ஏலே ஏலே ஏலே

இந்தா ஏலே இந்தா ஏலே

ஓரு மூச்சு ஏலே ஓரு மூச்சு ஏலே

ஓடி ஏலே இழுடா ஏலே

தம்பிமாரே ஏலே அண்ணமாரே ஏலே

கெதியா ஏலே கறுப்பு ஏலே

தெரியுதடா ஏலே கரைக்கு ஏலே

கெதியா ஏலே போகணும் ஏலே

கெதியா ஏலே போகணும் ஏலே

03. தோணி தள்ளுவோர் பாடல் (THONI THAZHZHUVOR PAADAL)

These songs are sung at the time of fishermen push the “Kaddu Maram at the beginning into the sea and at the ending into the shore.

ஓடி ஏலே ஏலைக்கிலம் ஏலே

பாசக்கயிறே ஏலே பாசவினோதே ஏலே

நாறின்பாஷை ஏலே வினோதகாளி ஏலே

கம்பன் காளி ஏலே உறுக்கிப்புடிரா ஏலே

ஏத்திக்கிட்டு ஏலே முதுகைக்கொடுத்து ஏலே

கிளப்பியடிரா ஏலே கொல்லாக்கட்டு ஏலே

04. தோணிக்காரன் பாடல் (THONIKKAARAN PAADAL)

These songs are sung by the man, who rides the boat at the time of they travel into the sea.

மீரா மீரா நாகூர் மீரா

விண்ணப்பந் தருவீரா

அப்பியல் மாதம் அடைமழைகாலம்

அறியாமல் பாய்விரித்தேன்

 

ஒரு முழத் தோணி ஒன்பது பலகை

கொண்டோடச் செய்மீரா

பாய் கிழிந்தது பாய்மர முடைந்தது

பதறுமே என் மனைவி

குஞ்சி குழந்தை முகத்தில் முழிக்கக்

கொண்டோடச் செய்மீரா

05.மீன் பிடிப் பாடல் (MEEN PIDI PAADAL)

These songs are sung by the fisher men at the time of they catch the fish.

கொண்டோடச் செய்மீரா

புறப்படுவோம் மச்சான் புறப்படுவோமே

கட்டுவலை எடுத்துகிட்டுப் புறப்படுவோமே

 

கடல்கடந்து செல்வதற்குத் தோணியுண்டு

கட்டைச் சுறா உழுவைமீன் கடலிலேயுண்டு

கடவுள் தந்த கைகளே முழுப்படவுண்டு

மச்சான் முழுப்படவுண்டு

In here, we can notify some of the songs which are sung in northern areas. Mostly they are called “Vasanthan Paadalgal (tre;jd; ghly;fs;)”.

01. கப்பற் பாடல் (KAPPAT PAADAL)

வினையரிசி தினையரிசி வேலம்ப நாட்டில்

வேலம்ப நாட்டிலொரு வௌ;ளாட்டுக் குட்டி

வௌ;ளாட்டுக் குட்டியொரு ஆறுமுக சாமி

ஆறுமுக சாமியைக் கயிறாய்த் திரித்து

புன்னிரண்டு கப்பலுக்குப் பாய்மரம் நாட்டி

நெஞ்சுக் கடாஷத்தால் சீனிப்பாய் துhக்கி

அக்காளுந் தங்காளும் சுக்கான் பிடிக்க

ஆனதோர் வள்ளியம்மை அஞ்சான் இழுக்க

பொக்குவாய்ச் சின்னக்குட்டி பீரங்கி போட

அம்பட்டச் சிதம்பரி பாய்விரித்தோட

ஏலஏலோ தத்தெய்தாம் ஏலஏலோ

02. வசந்தன் பாடல் (VASANTHAN PAADAL)

கிறுகு வசந்தன்

தெந்தின தினனத் தினதின தினன

தினதின தினனத் தினனானா

 

சிந்துர வதனச் சுந்தரம் உலவு

தேவர்க் கொருமுதல் ஆனவனைப்

பந்தனை அகலச் சிந்தனை மகிழப்

பாடிந டந்திட வாருமடீ

 

வாருமடீ மலை மாதுதன் மைந்தனை

வாசமு டன்துதி கூறிடவே

கூறுமடீ மன நேசமே தாய் எங்கள்

தும்பிமுகன் சிவன் மைந்தன்தனை

 

                       காதற் பாடல்கள்

Places - கடலோரக் காதல்
Statements - காதலன் கூற்று, காதலி கூற்று, தோழி கூற்று
Relationship - காதலர் உறவு முறை
Activity – காதலர் சந்திப்பு, காதலர் சல்லாபம், காதலர் வெறுப்பு, காதல் தோல்வி, பிரிவாற்றாமை, காதலர் துhது, மந்திரம் செய்யும் காதலர்
Married life – கணவன் மனைவி உறவு, பொருந்தாத் திருமணம்


 

01. கடலோரக் காதல் (KADALORA KAADHAL)
 

This song is in Mannar slang. Through this song we can see how much they love each other.
ஆண்:  என்னடி புள்ளே விடிச்சல்லே போச்சுது
செல்ல வேணுமெல்லே மீன் பிடிக்க
இன்மும் நித்திரை கொள்ளலாமோ நீயும்
எழுந்திரு புள்ளே பொழுது புலர்ந்திடுச்சு

பெண்: எழுந்திற்றேன் அத்தானே கொஞ்சம் பொறு
கோப்பித்தண்ணி வைச்சு தருவன் ஐயா
தொழுவுங்கோ நம்மைப் படைத்தவனை
தினம் வாழவழி வகை தந்ததுக்கு

02. காதலன் கூற்று (KAADHALAN KOOTTU)
 

ஆசைக்கிளியே என்ர ஆசியத்து உம்மாவே
ஓசைக் குரலலே - உங்க உம்மாவைக் கூப்பிடுங்க

கடலே இரையாதே காற்றே நீ வீசாதே
நிலவே எறியாதே - என்ர நீல வண்டுபோய்ச் சேருமட்டும்

03. காதலர் உறவு முறை (KAADHALAR URAVU MURAI)
 

ஊரார் மகனென்டு உன்ர வாயால ஏசிராத
மாமிமகன் மச்சான் - எண்ட மாங்கிளியே தேன்கரும்பே

மாமிமகன் தான் நான் மச்சான் முறைக்காரனுந்தான் – எண்ட
மாணிக்கக் கல்லே - நீ மாற்று மொழி ஏன் கதைத்தாய்

 

04. காதலர் சந்திப்பு (KAADHALAR SANTHIPPU)
 

கூடம் அறியான் குளக்கரைதான் அறிவன்
கூடத்தடையாளம் கூறுவர் ஆர் எனக்கு

சுற்றிவர வேலி சூழவர முள்வேலி
எங்குமொரு வேலி - நான் எங்கால வந்திரட்டும்

05. கணவன் மனைவி உறவு (KANAVAN MANAIVI URAVU)
 

சாம்பல் மொந்தன் குலைபோல சமைஞ்ச கொம்பன் நானிருக்க
ஏந்து கொம்பன் குழந்தையோட உனக்கு என்னவிருப்பம் வந்ததுகோ

வாழையில குலையிருக்க வாழ்மயிலாள் சிறையிருக்க
சேனையில நீயிருக்க - சீனிப்பிள்ளை தேடிவரக் காரணமேன்

                     கதைப் பாடல்
 


 

01. கமுகஞ் சண்டை (KAMUKANCH SANDAI)
 

It describes the activity of “Thanneer oottu” people against the British government.
Kamuku means one of the types of tree which seed is used with beetle to chewing. It is called as nuts tree in English. The Mullaitivu government complains to the Haughton (one of the higher officer in British government), that the low cast people’s Kamuku gardens are disturb the watering of the paddy fields of one party, who has lot of higher influence. Due to this complain, the Haughton order them to cut those trees. But the people didn’t allow them to cut & do some fights against them. The Haughton couldn’t tolerate this problem. So he sends this problem to his higher officer. Finally the higher officer comes to that place with the group of his soldiers with guns & cut the trees with the full guard. The following songs describe this situation. Here some of the situations only have been mentioned. For the whole songs please refer the following book, கமுகஞ்சண்டை நாட்டார்

கதைப்பாடல், முல்லைமணி - 1979.
 

ஹோட்டன் துரை கட்டளை
காட்டுராசா கதிர்வேல்வினாசி வாரும் நீ ரென்றான்
கமுகு தறிக்கக் கட்டளை வந்தது பாரும் நீ ரென்றான்
பகிரித்தம்பி சுலுத்தான் கண்டு வாரும் நீ ரென்றான்
பாக்கு மரங்கள் தறிக்கிறகட்டளை பாரும் நீ ரென்றான்
காதறுசாய்பு மீராலெவ்வை வாரும் நீ ரென்றான்
கமுகு தறிக்கக் கட்டளை வந்து பாரும் நீ ரென்றான்

ஊரவர் எதிர்ப்பும் ஹோட்டன் துரை ஓட்டமும்
எல்லாரும் கூடி ஆலோசனைகள் நன்றாய்ச் செய்தாரே
கமுகு தறிக்கில் தலையுடைபடுவீர் சங்காரப் பயல்காள்
கத்திக்குத்து விழுகுதுபார்பார் காதறு சாய்பென்றான்
திரண்ட சனத்தைக் கண்ணால் கண்டான் ஹோட்டன் துரை தானும்
குமுறிவிழுந்தே ஓடிப்போனான் ஹோட்டன் துரை தானும்
குமுகுமுவென்றே வாரிப்பாயுது குஞ்சிநீலக் குதிரை
அரைநாழிகைக்குள் அரண்மனை சேர்ந்தான் ஹோட்டன் துரை தானும்
வக்கணம் கண்டு வெட்கம் பொருந்தி ஹோட்டன் துரை தானும்

 

02.குருவிச்சி நாச்சி சலிப்பு (KURUVICHI NAACHI SALIPPU)
 

Some records say that kuruvichi naachi salippu has published at “Kugan Printers shop” by Mr.Sanmugasundharam in 1985. He says that he wrote these songs with the help of great musician Mr.Kanapathipillai, who is from “kokku thoduvaai” area.
There is a message in the family of “Karna” that is Kuruvichi Naachiyaar is lover of King Bhandaara Vanniyan. But in these songs they are not used Bhandaara Vanniyan’s name. They are only mentioned his name as “Kottavan”.
STORY OR MAIN THEME OF THIS SONG
King Bhandaara Vanniyan loves Kuruvichi Naachiyaar. But he couldn’t marry her, because of the 2 years are not complete his dad death. When he starts to go to a war, his lover makes some sweets and sent it to him by her friend. He promises his lover that after the ending of the war with the victory he’ll marry her. But unfortunately the king dies in the war. So, she commits suicide.
This is the story behind these songs. The following song is one of the types of above category. It has formed as a crying of mother, who is not actual mother just she look after mother.

 

வளர்ப்புத்தாய் புலம்பலாக இக் கதைப் பாடல் திகழ்கிறது
மேற்புலத்து வௌ;ளையனை மேலுலகு அனுப்பச் சென்ற
கோற்றவனைக் கண்டுள்ளம் பூரிக்கக் சென்றாயோ
பொரி விளாங்காய் காவலின் கைகொடுத்து அனுப்பியது
பொரி பொரியாய் உன்வாழ்வு பொரிந்து கரியாவதற்கோ
செங்காந்தட் செவ்விதழ்கள் கார்த்திகை கிழங்கெடுத்து
பொங்கும் அழகழிய நச்சுணவை ஆக்கியதோ

 

03.வன்னி நாச்சிமார் மான்னியம் (VANNI NAACHCHIMAAR MAANMIYAM)
 

This song has published by Mr.T.Sanmugasundharam. In Vanni district, there are 6 brothers governs the district. They are called as “Vanniyar”. They wish to go to “Tamilnadu” as a pilgrimage. So, they give the charge to their uncle Naagappar & start their journey. Another King Nambi, who is governs “Perumalai” gives tortures & tries to get the Vanni district. But his all tries goes fail in front of King Naagappar. So, he gets the British government’s help. Due to that the British team attacks the Vanni district. But the all tries have been failed by Naagappar. But at the time of war end the King Naagappar dies due to he falls down from the horse. So, the King Nambi again sends the team. At this time the 6 wives of Vanniyar fight against them with the man dresses. One of the British soldiers kills the head of the Vanniyar group. But the wives continue the war with their lady servant. But they couldn’t tolerate their gun shoots. Finally the Vanni team has been destroyed by British team. The 7 ladies didn’t like to lose their self to British people. So, they commit suicide by eating a type of grinded poisonous seed and die at that place. The people, who see theirs activity, respect them as their god. The 7 ladies become respected peoples.
The following song tells about the above story. But there are no records to emphasize the story. So, after some years the songs are attached with the “Saptha Kanniyar Prayers”.

 

மாற்றானின் கரம்பட்டு மாசுபடும் மானமதை
ஏற்காது மாதாக்கள் உயிரிழக்கச் சித்தமானார்
பொல்லாத நஞ்சுசிறை குன்றிமணி வித்துக்களை
செங்கல்லுடனிடித்துத் துவைத்துக் கரந்தாங்கி
பேராறு மாதாக்கள் பணிப் பெண்ணுடன் சேர்ந்து
விராவேசமுடன் நஞ்சுண்டு மடிந்தனரே
கற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது
அன்புருக நின்றார்கள் வன்னி வள நாட்டினர்கள்

 

04.கொட்டுக் கிணற்றுப் பிள்ளையார் கும்மி (KODDU KINATTU PILLAYAR KUMMI)
 

It describes the history of “Koddu Kinattu Pillayar” at “Kumuzhamunai temple” in Mullaitivu district. This song continues as a story.
A man brings 3 statues of god “Pillayaar” in a vehicle from Bharath continent. In the same vehicle, he brings dry fishes also. Because of the bad smell of dry fish one statue get down from the vehicle in “Semmalai” and reach “Kumuzhamalai”. Others two also get down, one in “Koatta Kaeni” and another one in “Amarivayal”.
In Kumuzhamunai, the statue hides in to the rice seeds while the farmers are doing threshing. For 3 days they thresh them. Although they couldn’t finish it & the no of rice seeds increase. So, they fall sleep due to the tiredness. In the dream, the god Pillayar comes and says that he is in into the rice seeds, if the vehicle man comes please say him that there is nothing other than stones in rice seeds. Next day the vehicle man comes & they say according the god’s words. After he returns, the people take that statue out side, keep that under the “Koddu Kinaru” & worship it. From that day the area becomes green.
After some days the vehicle man knows this incident. So he comes to Kumuzhamunai & destroys the statue. When he goes back to his area after his activity he dies at “Thimir Eduththa Vaaikal” place.
This sings as “Kummi” in front of “Koddu Kinattu Pillayar”.

 

காட்டு மிருகங்கள் அச்சமில்லை கன்று
காலிகள் ஊரினில் சேதமில்லை
வீட்டுச் சனங்கள் செழிக்க மும்மாரி
தேசமெங்கும் நித்தம் பெய்ததடி
பால் தயிர் மோர் வெண்ணை அத்தனையும்
பாக்கியமாகச் செழித்திடவும்
ஆல்போல் தளைக்க குமிழமுனையிது
என்ன அதிசயம் சொல்வேனடி

 

05.அரியாத்தை பேரில் ஒப்பாரி (ARIYAATHAI PAERIL OPPARI)
 

One of the famous songs in Vanni area is “Vaelapanikkan Penchathi Ariyaathai Paeril Oppari”. Generally the ladies sing “Oppari”. But it had sung by a gent his name is “Vaelapanikkan”. When his wife died, he sung this Oppari. In this Oppari, it tells a story about a woman her name is “Ariyaathai” how she controls the violent elephant.
In mangrove forest, one of the violent destroys the area. The “King Sinna Vanniyan” calls all 7 villages “Panikkar” & discusses with them about this problem. One of the persons in that conference stands & says that “Vaelapanikkar” is the suitable person to catch the elephant. After his suggestion, another one, who is have jealous in “Vaelapanikkan” stands & kidding him that he can’t do, his wife only can do.
After the discussion the “Vaelapanikkar” comes to his home & is sad. His wife notices it & asks the reason behind his sad. So, he says the conversation in that conference. Finally, his wife goes to catch the violent elephant, she controls the elephant & comes to the King’s place on that elephant. In King’s place the give a big welcome to her. After the function, when she goes home, her body feels tired. Finally, she goes home & dies in her husband’s hand. But there is no clear reason to her death.

 

ஆனைகட்டப் போனடத்தே
ஆதரவே ஆருயிரே
ஆசைமட மாமயிலே - உனக்கு
ஐயங் காச்சி பட்டமுவோ

உனக்குப் பேய்தான் பிடித்ததுவோ
என்பேர்; பெரிய நாயகியே
தீரமுடை தேவியரே - உனக்கு
பெல்லிப்பேய் விட்டினமோ
It says she did this work by her pure virginity. The Oppari finally ends that Vaelapanikkan also dies by jumping into the fire, while his wife’s body subject in to that.

குழந்தைப் பருவப் பாடல்கள்

 

From the age of the child didn’t speak until the sixteen ages is called as child age.

In this stage, the mom sings lot of songs at the time of feeding the rice & at the time of she teaches to play games. Even these songs can’t understand by the child, it’s music easily capture by them.

In my life also, I am heard these songs while my parents sing to me. Actually, I had no chance to hear some songs, although I have heard them when my grand parents sing to my younger. Even I also have sung some songs.

There are lots of like these songs were available in Tamil. But now, some songs are hidden due to kept as oral like other folk songs.

In 1951, there was a book released as a collection of English children’s songs. It is released by Zona Peter Opie in the name of “The Oxford dictionary for Nursery Rhymes”. In this book, there are 550 children songs present. And also there are songs available from the 19th century. But in Tamil, there is no books like this, are my worries. Now also, if we publish a book, there is a doubt it can be equal to half of that book.

These songs were brought as oral songs by the moms from generation to generation. Due to they kept as oral, some of them are hidden. At the same time, some persons sing these songs by joining the new lines with the known old songs.

To the development of child’s good character & intelligent, there is a good contribution to their activity as like eyes & ears. In the activity, hand & leg take important part. The mom gives practice to her child’s hand & leg with out knowing these things.

In early stage of the child, the fingers are in closed position. The mom gives practice to the fingers by her songs while she open & close them. The following songs are used in such situations.

பொன்னாத்தா

பொன்னின் குப்பியைத் தா

பொன்னான் எங்கட

செப்பைத்தா…

 

சின்னான் சின்னி விரல்

பொன்னான் பொன்னி விரல்

வாழை நெடுங் கிளாத்தி

வந்தாருக்குக் கை காட்டி

ஒன்றுந் தெரியாத ஊமைச்சி…

 

கீரைக்கடை கீரைக்கடை

நண்டூருது நரியூருது

கீச்சு மூச்சு

 

Following songs are used at the stage of the child starts to sit and stand with the help of mom.

சாஞ்சாடம்மா சாஞ்சாடு – என்

தாமரைப் பூவே சாஞ்சாடு

குத்து விளக்கே சாஞ்சாடு என்

கோவில் புறாவே சாஞ்சாடு

 

பச்சைக் கிளியே சாஞ்சாடு – என்

பவளக் கொடியே சாஞ்சாடு

சோலைக் குயிலே சாய்ஞ்சாடு

தோகை மயிலே சாய்ஞ்சாடு

 

கண்ணே மணியே சாஞ்சாடு – என்

கற்பகத் தருவே சாய்ஞ்சாடு

கண்டே தேனே சாஞ்சாடு

கனியே பாலே சாஞ்சாடு;

 

சாஞ்சாடம்மா சாஞ்சாடு

சாயக்குயிலே சாஞ்சாடு

வட்டிலுக்கும் சோத்துக்கும் சாஞ்சாடு

வாழைப் பழத்துக்கு சாஞ்சாடு

 

The above song is one of the correction forms, which is corrected for school children. The following song lines are the real one, which was used in ancient time.

சாஞ்சங்கண்டே சாஞ்சம்

சாய மயிலாரே சாஞ்சம்

வட்டிக்கும் சோத்துக்கும் சாஞ்சம்

வாழைப் பழத்துக்குஞ் சாஞ்சம்

குத்து விளக்கே சாஞ்சம்

அன்னே பின்னே சாஞ்சம்

அழகுள்ள மயிலே சாஞ்சம்

 

The mom gave the practice to move front and back while it sits by above song, she uses below song to give a practice in sides. This song is named as Aanaiyaadal (ஆனையாடல்).

ஆனையாடுமாம் தம்பி

ஆனையாடுமாம்

என்னானை அது பொன்னானை

எங்கள் குலத்துக் கொரு அரசானை

முத்துக் கொம்பன் ஆனையது

முதுகு சொறியு மானையது

சப்பட்டைக் காலன் ஆனையது

ஆனை ஆடுவான் தம்பி ஆனை ஆடுவான்.

 

To some child’s, we can’t change their habit if they become usual to them. In that situation the mom tries to focus its mind to another activity. Below song also sing in such situation, in here a child hardly sit at the particular for a long time. So, its mom tries to loose its position and try to change its mind. The song is called as “Sappaani Koddu Paadal (சப்பாணி கொட்டு பாடல்)”.

சப்பாணி கொட்டம்மா சப்பாணி

சாய்ஞ்சு கொட்டம்மா சப்பாணி

செப்பு நிறைந்ததொரு கையாலே

செண்பகம் பூத்தொருகையாலே

 

முத்துப் பதித்தொரு கையாலே

மோதிரம் போட்டொரு கையாலே

சப்பாணி கொட்டம்மா சப்பாணி

சாய்ஞ்சு கொட்டம்மா சப்பாணி

 

The mom not only sings songs at the time of sleeping & feeding meals, but also sings when she gives bath to the child. By this, she make the time wonderful to her child & reduce suffer when give bath. Following song uses in these situations. And also she gives massage and shape its nose & ears while sings below song.

சிவம் சிவம் சிவம்

நாய்க்கு மூக்கில்லை

நரிக்கு மூக்கில்லை

நான் பெத்த பிள்ளைக்கு

மூக்குவளர; மூக்குவளர;…..

 

This song extends further. But I couldn’t find those excellent lines.

                   தாலாட்டுப் பாடல்கள்

Thaalaaddu is a song, which is sung by the mom, grand mom, aunty & other relatives to make the child as sleep & stop the child’s cry. And also some times it gives the reason of the mom’s cry. It is one of the types of folk songs, which is joined with villager’s life & feelings. These songs were earlier kept as oral literature. But it is now kept as books by the folk songs researchers. The songs contain a sweet music. The child goes asleep by this sweet music.

The literature specialist says the meaning of “THAALAADDU (தாலாட்டுப் பாடல்கள்)” as follows, if we divide the name in two words as THAAL (தால்;) – AADDU (ஆட்டு), THAAL means Tongue and AADDU means swing. So all together THAALAADDU means, the song is sung by swing the tongue. And also it can be called as “AARAADDUTHAL” because of the sound, which is made at the time of they sing Lullaby as “Aararo Aariraro” (ஆராரோ ஆரிரரோ). And also, this sound is continued at the middle & end. Usually, the mom sing lullaby while she swing the child in her shoulder, hand, etc.

This song can be called as, Raaraaddu (ராராட்டு), Roraaddu (ரோராட்டு) in Tamil. Even the singer know a lengthy song & has an ability to lengthen the song, the length of the song depends on the time, child start to sleep. This song is sung in different language all over the world. It has a correct start. It has no meaning as follows,
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ (Aararo Aariraro Aariraro Aariraro) or ராராரோ ராரிரரோ ராரிரரோ (Rararo Rariraro Rariraro Rariraro) or ரேரே ரேரரே ரேரே ரேரரே (Raerae raerarae raerae raerarae)

Mr.R.Subramaniyan has listed 3 items, which can be mentioned as objectives of Lullaby. They are, child, wanted things, and Relatives.
CHILD
In here, the following items are mentioned as main, Child’s beauty, it’s important to them, its future and the mother’s fasting to get a child.
WANTED THINGS
Here also they wish the thing’s beauty & work and thank to the person who make & give them as gift.
RELATIVES

Here, they congrate their relatives good things & their family background.

01. PILLAI VARAM VAENDAL – பிள்ளை வரம் வேண்டல் (Prayer To Get A Child)
This song is sung by a mom, who is not got a child yet. She pray to the god “please give me a child” as a song. And also she mentions that what are the satisfactions she made to get a child. Following song also can be under this category.

பிள்ளை யில்லையின்னு
தில்லைவனம் போகயிலே
தில்லைவனம் கண்தெறந்து
பிள்ளைக்கலி தீத்தாக

 

மஞ்சள் இல்லையின்னு
மாயவரம் போகையிலே
மாயவரம் கண்தெறந்து
மைந்தன்கலி தீத்தாக

பிள்ளை யில்லையின்னு
பூமரத்தைக் காத்திருந்தோம்
பூத்தந்தா வாடுமின்னு
பூள்ளை தந்தாராராட்ட

 

மைந்தனில் லென்னு
மாமரத்தைக் காத்திருந்தோம்
மாலைதந்தா வாடுமின்னு
மைந்தன் தந்தா ராராட்ட

02. MARUTHUVICHI VAAZHTHU – மருத்துவிச்சி வாழ்த்து (Wishes From A Lady Doctor)

A baby, when it arrive this world from the mother’s uterine, before the mom’s lullaby the lady doctor sing a song. This song is also considered as a type of lullaby. It is called as “Maruthuvichi Vaazhthu” (wishes from a lady doctor) in Tamil.
In this song, she wishes the child as it have to grow with good health in the world. Also she accompanies some good thoughts in that song, which are in her mind.

 

அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி
அரிசி மலைநாடுங் கண்டீரோ தம்பி
நெல்லுப் பொதியோடும் வந்தீரோ தம்பி
நெல்லு மலைநாடுங் கண்டீரோ தம்பி

மிளகுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
மிளகுமலைநாடுங் கண்டீரோ தங்கம்
இஞ்சிப்பொதியோடும் வந்தீரோ தங்கம்
இஞ்சிமலைநாடுங் கண்டீரோ தங்கம்

 

உள்ளிப் பொதியோடும் வந்தீரோ தம்பி
உள்ளி மலைநாடுங் கண்டீரோ தம்பி
மஞ்சட் பொதியோடும் வந்தீரோ தம்பி
மஞ்சள் மலைநாடுங் கண்டீரோ தம்பி

உப்புப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
உப்பு மலைநாடுங் கண்டீரோ தங்கம்
காசுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
காசுமலைநாடுங் கண்டீரோ தங்கம்

 

கோச்சி வாழ கொப்பர; வாழ
பேத்தி வாழ பேரன் வாழ
பூட்டிவாழபூட்டன் வாழ
கொம்மான் வாழ மாமி வாழ
குஞ்சியாச்சிவாழ குஞ்சியப்புவாழ
ஊர; வாழ தேசம் வாழ
குருவுக்கும் சிவனுக்கும் நல்ல பிள்iளயாயிரு

அயலும் புடையும் வாழ வேண்டும்
அன்னமும் சுற்றமும் வாழ வேண்டும்
ஆச்சியும் அப்புவும் வாழ வேண்டும்
அம்மானும் மாமியும் வாழ வேண்டும்

 

03. THAAYIN THAALAADDU - தாயின் தாலாட்டு (Mother’s Lullaby)

The lullaby which is sung by a mom is different from village to village and community to community. Although, there are some styles common to all. When we focus the lullabies, they actually mention the child’s beauty. We have to appreciate this, that time mom had a good Tamil knowledge.
Like this songs, there are lot of sung in the ancient time. In those, some of them are now also murmured by some mothers. Following song also can be under this category.

Sister’s Lullaby
Following song we have to focus one thing, usually the lullaby song is sung by a mom. But in this case, a girl sings a lullaby to her sister to make her sleep.

 

அவர கலகலென்ன
அங்கு வில் சாத்தாம
அவரமல்லி ஆம்படியா
அரண்மனைக்குப் போகிறான்

செஞ்சி மலதாசி
சென்றாள் மலைக்காட்ட
பில்லு ருசியென்று
பொழுதேறி மேயாதே
தண்ணி ருசி யென்று
தலைதப்பி மேயாதே
அங்கங் கண்ணுறங்கி
அப்புறமே போய் வாரும்

 

ஆராரோ ஆரரிரோ
ஆராரோ ஆரரிரோ

Father’s Lullaby

This song also include as one of the category of lullaby. A mom sing a song with the meaning of that, its dad is going to bring lot of dowry to his child.

 

பாலன் குழலான் - நீ
பசித்து அழுதாய் என்று சொல்லி
பால் பசுவோ தேடி
பயணம் இட்டார; உங்கள் அப்பா

காடெல்லாம் சுத்திக்
காராம் பசு தேடி

 

மலைமேல் பசுமேய
ஆனிடையார; பத்தி வர
பத்தி வந்த பால் பசுக்கு
பால்மடுவும் தங்க நிறம்

கொண்டுவந்த பால் பசுக்கு
கொம்புரெண்டும் தங்க நிறம்
வாங்கிவந்த பால் பசுக்கு
வால்எல்லாம் தங்க நிறம்

 

உக்கார;ந்து பால் கறக்க
முக்காலி பொன்னாலே

பிடித்திருந்து பால்கறக்க
பிடி செம்பும் பொன்னாலே

 

கன்று கட்டத் தும்பு
கடை காலும் பொன்னாலே

04. MALADIYIN THAALAADDU - மலடியின் தாலாட்டு

A lady who haven’t the god’s love, got married with lot of expectations. But she didn’t get a child even after 2 years. At that situation there are lot of peoples blame & criticize her that she haven’t a child.
So that lady worries by those words. And also she makes lot of prayers to the gods that please give me a baby.
For a several years she fights with gods and finally gets a child look like a moon. That mom sings a lullaby with joy to her child as follows. This song contains totally 24 paragraphs. It is mostly used in north Sri Lanka.

 

மலடி மலடி யென்று
மாணிலத்தார் ஏசாமல்
மலடிக் கொரு குழந்தை
மாயவனார் தந்த பிச்சை

இருளி இருளி என்று
இன்னிலத்தார் ஏசாமல்
இருளிக்கொரு குழந்தை
ஈஸ்வரனார் தந்த பிச்சை

 

காயாமலடி என்றும்
கள்ளி யென்றும் ஏசாமல்
காயா மலடிக்குக்
கற்பகனார் தந்த பிச்சை

இனா மலடி என்றும்
இருளியென்றும் ஏசாமல்
ஈனா மலடிக்கு
ஈஸ்வரனார் தந்த பிச்சை

 

காயாத புன்னை மரம்
காய்க்க கனாக் கண்டவரே
பூவாத புன்னை மரம்
பூக்கக் கனாக் கண்டவரே

கெட்ட கண்ணைத் தந்தவரோ
பட்டகுறை தீத்தவரோ
கேளாச் செவியிரண்டும்
தாளாய்த் தின்றவரோ

 

ஆறிரண்டுங் காவரி
அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்க மாடித்
திருப்பாற் கடலாடி

மாமாங்கம் ஆடி
மறுதலங்கள் நீராடி
தைப்பூச மாடித்
தவசு பண்ணி வந்தவரே

 

பிள்ளை இல்லை யென்று
பெருந்தவங்கள் செய்தோனே
மைந்தன் இல்லையென்று
மாதவங்கள் செய்தோனே

பாவல் மலரெடுத்து
பகவானைக் கைதொழுது
தும்பை மலரெடுத்துச்
சூரியனைக் கைதொழுது

 

வெந்த மரத் தின்றால்
விரதம் அழியு மென்று
பச்சைமாத் தின்று
பகவானைக் கைதொழுது

வெள்ளிக் கிழமை
விரத மகத்துவத்தால்
பிள்ளைக் கலி தீர்க்கப்
பிறந்த நவரசமே

 

பரமசிவன் வாசலிலே
பலநாள் தவமிருந்து
பரமசிவனார் தந்த
பைங்கிளியே கண்வளராய்

ஈஸ்வரியாள் வாசலிலே
இரந்து தவங்கிடந்து
ஈஸ்வரியாள் தந்த
இந்திரனே கண்வளராய்

காயாது காய்த்த நீரோ
கார்த்திகைப் பூப் பூத்தநீரோ
பூவாத மாவிலேயோ
புட்வித்த புண்ணியரோ

மலடி திரு வாசலிலே
மான் கன்றாய் வந்தீரோ
இருளி இரு வாசலிலே
ஓளி விளக்காய் வந்தீரோ

 

துhரத்துக் கோயிலுக்குத்
துhண்டா விளக்கேற்றுவிப்பார;
காணாத கோயிலுக்குக்
காணிக்கை போடுவிப்பார்

எட்டாத கோயிலுக்குக்
ஏட்டி விளக்கேற்றுவிப்பார்
காணாத கோயிலுக்குக்
காணிக்கை போடுவிப்பார்

 

மடிக்குழந்தை வேணுமென்று
மாதவங்கள் செய்தவரோ
கைக்குழந்தை வேணுமென்று
கடுந்தவங்கள் செய்தவரோ

குளிக்கக் குளம் வெட்டி
கும்பிடக் கோயில் கட்டி
படுக்க மடங்கட்டுவிப்பார்
பாக்கியவான் உங்கப்பா

 

பந்தம் பிடித்துப்
பசித்தாரை ஆராய்ந்து
கூடையிலே சோறும்
குடத்திலே நீர்மோரும்

தாராளமாய் எடுத்து
தயவாகவே கொணர்ந்து
ஆராய்ந்து அன்னமிடும்
அருச்சுனராம் உங்களப்பா

 

கொம்புக் கனியோ
கோதுபடா மாங்கனியோ
வம்புக் கழுகிறீரோ
வாயெல்லாம் தேனுhற

மந்தி குதிபாயும்
மாப்பழுத்த சோலையிலே
தம்பி குதிபாய்வான் தன்
தாயார் மடிமேலே
In 1964, Mr.S.Nithyananthan has released a book with the help of Sri Lankan Education Ministry in the name of “Naaddar Paadalgal (நாட்டார் பாடல்கள்)” for the school uses. In that book, there are 7 Tamil lullabies.

bottom of page